கோபிந்த்: அரசுச் சேவைகளை எளிதாக்க MyGOV செயலியில் முகவர் AI இணைப்பு
மலேசியர்கள் அரசு நிறுவனங்களுடன் இணையம் வழி எளிதாகத் தொடர்புகொள்ள MyGOV Malaysia செயலி முகவர் AI மூலம் மேம்படுத்தப்படுவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார். ஆகஸ்ட் 8 அன்று Dewan Komuniti Damansara Damai-இல் Jelajah Malaysia Digital நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறியதாக The Star தெரிவித்தது.